Atlanta Tamil Mandram


தமிழே துணை

Help us build our ATM Community Center

அட்லாண்டா வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும், அட்லாண்டா தமிழ் மன்றத்தின் வரலாற்றில்.. ஒரு மிகப்பெரிய தருணம்!
 
அட்லாண்டா தமிழ் மன்றம் பிரவுன் பிரிட்ஜ் சாலையில் 4.29 ஏக்கர் நிலத்தை (ஃபோர்சித் கவுண்டியில் உள்ள கம்மிங் & கெய்ன்ஸ்வில்லின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது) $400,000க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முக்கியமான தருணம், அட்லாண்டாவில் தமிழ் சமூகத்தினருக்கென ஒரு பிரத்யேக சமூக மையம் மற்றும் நிரந்தர இருப்பிடம் அமைக்க வேண்டும் என்ற, எங்களது நீண்ட கால நோக்கத்தை நனவாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
அட்லாண்டாவில் உள்ள ஒவ்வொரு தமிழரின் தளராத ஆதரவாலும், தீவிர ஊக்குவிப்பாலும் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. கெளரவ உறுப்பினர்கள், வாழ்நாள் உறுப்பினர்களின் பங்களிப்புகள், நிதி திரட்டும் நிகழ்வுகள் மற்றும் சமூக மையத்திற்கான குறிப்பிட்ட நன்கொடைகள் ஆகியவை ஏற்கனவே எங்களின் நிதி திரட்டும் இலக்கின் பாதியை கடந்துவிட்டது.
 
இந்த நிலத்தை வாங்குவதை உறுதி செய்வதற்கான இறுதி தேதி ஜனவரி 16, 2025 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதிக் கோட்டைக் கடக்க உங்கள் ஆதரவு எங்களுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த கனவை அடைய அனைத்து தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணையுமாறு அட்லாண்டா தமிழ் மன்றம் அழைப்பு விடுக்கிறது.
நீங்கள் உதவுவதற்கான வழிகள்:
 
உங்கள் வருடாந்திர உறுப்பினர் வகையை வாழ்நாள் அல்லது கௌரவ உறுப்பினராக மேம்படுத்தி எங்களுக்கு நிதியை வழங்கலாம்.
 
உங்கள் நன்கொடையை வாரி வழங்குங்கள். உங்களது ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த கனவை நனவாக்க உதவுகிறது.
 
நீங்கள் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இந்த செய்தியை பகிருங்கள். உங்களது ஒவ்வொரு பகிர்வும் நமது இந்தப் பயணத்தை வெற்றியாக்கும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்க ஊக்குவியுங்கள்.
 
நம் வரும் தலைமுறைகளுக்கு ஒரு நிலையான பாரம்பரியத்தை உருவாக்க உதவுங்கள். நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக உணர்வை கொண்டாடும் இடத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.
 
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!

Atlanta Tamil Mandram – A Milestone Moment for Our Community!

We are thrilled to announce that Atlanta Tamil Mandram (ATM) has signed a contract to purchase 4.29 acres of land on Brown Bridge Road (located at the north border of Cumming & Gainesville in Forsyth County) for $400,000. This milestone is a significant step toward realizing our long-term vision of establishing a dedicated Community Center and a permanent home for the Tamil community in Atlanta.

This achievement is possible because of the unwavering support and active encouragement of every Tamil in Atlanta. Contributions from Honorary Members, Lifetime Members, fundraising events, and specific donations for the Community Center have already brought us past the halfway mark of our fundraising goal.

With the closing date set for January 16, 2025, we need your support now more than ever to cross the finish line. ATM calls upon all Tamil individuals, families, and organizations to come together to achieve this dream.

How You Can Help:

  • Upgrade to Life Member or Honorary membership: Become a life or honorary member or upgrade your annual membership to Life or honorary.
  • Donate Generously: Every contribution brings us closer to making this vision a reality.
  • Spread the Word: Encourage friends, family, and colleagues to join in supporting this cause.

Together, we can create a lasting legacy for generations to come. Let’s unite to build a space that celebrates our culture, heritage, and community spirit.

Thank you for your continued support!