Events

Seniors day 2023

மூத்தோர்கள் சந்திப்பு

அட்லாண்டா தமிழ் மன்றம், முதியவர்கள் சந்தித்து அளவளாவ ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 5-ஆம் நாள் அன்று, ஷரோன் போர்க்ஸ் நூலகத்தில் (Sharon Forks Library) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
 
நம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து, கோடை விடுமுறைக்காக, அட்லாண்டா வந்திருந்த பெரியவர்களை சந்தித்து புதிய நண்பர்களை உருவாக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.
விருந்தினர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரவர் பொழுதுபோக்குகள் மற்றும் அவரவர் விருப்பங்களைப் பற்றி பேசுவதுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 
விருந்தினர் அறிமுகத்திற்கு பிறகு, யோகா பயிற்சி தொடங்கியது.
புகழ்பெற்ற யோகா ஆசிரியை திருமதி சந்தியா பிரசாந்த் நாற்காலி யோகாவை நிகழ்த்தினார், இது உடல் மற்றும் மன நன்மைகளை வழங்கும் பயனுள்ள பயிற்சியாகும். கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் நாற்காலி யோகா பயிற்சியை கேள்வி பதில் அமர்வுடன் முடித்தனர்.
அடுத்த அமர்வை சஹஜ யோகா தியானக் குழு, திருமதி சைத்ராலி சால்வி மற்றும் திரு. கார்த்திக் சுரேஷ் ஆகியோர் நடத்தினார்கள்.
கார்த்திக் சுரேஷ், கேள்வி பதில் அமர்வில் உள் மன அமைதியை உணர தனித்துவமான தியான முறையை விளக்கினார்.
ஒரு சிறிய இடைவேளையின் போது, தங்கள் அனுபவங்களை பற்றியும், குடும்பத்தினர் பற்றியும் பேசி மகிழ்ந்தனர்.
 
அடுத்ததாக பிங்கோ விளையாடினர். ஒவ்வொரு எண் அறிவிக்கப்பட்ட போதும், தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்து, சிரித்து உற்சாகமாக விளையாடினர். நிறைய பரிசுகளையும் வென்றனர்.
 
நிகழ்ச்சி முடிவின் போது, ஒரு குடும்ப விழாவில், உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தது போன்ற, மன நிறைவுடன் பிரிந்து சென்றனர். தொலைபேசி எண்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அட்லாண்டா தமிழ் மன்றம், பல நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும், முதிய விருந்தினர்களை சந்திக்கவைத்து, அளவளாவ செய்தது ஒரு விவரிக்க இயலா பேரானந்தத்தை கொடுத்தது.

மன்றத்தின் சார்பில், திருமதி.ரம்யா கருப்பையா மற்றும் திருமதி. இளமதி ராஜா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக இருந்தனர்.
இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்த இளையவர் உட்பட அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி.

Senior's day event

Atlanta Tamil mandram conducted a Senior program for ATM senior citizens of Atlanta on Aug 5th 2023 at Sharon forks library from 2:30 pm till 5:30 pm encouraging new member registration too.
 
It was a great opportunity for the elders to meet and make new friends along with a cup of tea and light snacks.
Ramya karuppiah and Elamathy were the ATM event organizers. It began with each one of them introducing themselves and talking about their hobbies and their likings.
All the 3 yoga teachers were given a warm welcome with a gift, as a token of appreciation from ATM team.
Mrs Sandhya Prasanth, a renowned yoga certified teacher performed chair yoga which is an effective practice that offers numerous physical, mental and emotional benefits.
All the members present practiced chair yoga poses ending with Q&A session.

The next session was conducted by Sahaja Yoga meditation Team, Mrs Chaitrali Salvi and Mr. Karthik Suresh a dedicated Sahaja yoga Instructor explaining a unique method of meditation to discover inner peace ending with Q&A session.

The elders enjoyed a short break with Tea and snacks where they connected to each other and continued with Playing Bingo winning lot of surprise gifts. Last but not the least, thanks to all the volunteers, particularly our youth volunteers for all the support who made this event a grand success.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.