Pongal event 2024: Summary
பொங்கல் திருவிழா நன்றி நவிலல்
இத்தமிழ் விழாவின் வாயிலாக அட்லாண்டா வாழ் தமிழ் சொந்தங்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் வெற்றி கொண்டாட்டமாக்கிய அனைத்து தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கும் அட்லாண்டா தமிழ் மன்றத்தின் சார்பில் நன்றி.
ஜார்ஜியாவின் ஆளுநர் திரு. பிரையன் பி. கெம்ப் அவர்கள் ஜனவரி 15, 2024 ஆம் தேதியை “தமிழ் தைப் பொங்கல் தினமாக” அறிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரத்திற்காக ஆளுநர் பிரையன் பி. கெம்ப் அவர்களுக்கும் டாக்டர் இந்திரன் பி. இந்திரகிருஷ்ணன் (எம்.டி., ஜார்ஜியா போர்டு ஆஃப் ஹெல்த்கேர் ஒர்க்ஃபோர்ஸ்) அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட 1500 பேர் இந்த விழாவை கண்டு களித்தனர். 320 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்ற 32 விதமான கலை நிகழ்ச்சிகள், ஆதவன் கலை குழுவினரின் இசையோடு இணைந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. பியூர் ஹார்ட்ஸ் குழுமத்தை சேர்ந்த குழந்தைகளின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இருபதுக்கும் மேற்பட்ட விற்பனைச் சாவடிகளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பொருட்களை வாங்கினர். செவிக்கு மட்டுமில்லாது வயிற்றுக்கும் வந்திருந்த விருந்தினர்களுக்கு அறுசுவை தலை வாழை விருந்து பரிமாறப்பட்டது.
- திரு.டாட் லெவென்ட் (ஃபோர்சித் மாவட்ட ஆணையர்)
- திரு.கார்ட்டர் பாரெட் (மாநில பிரதிநிதி-அட்லாண்டா)
- திரு. பாப் எர்மில்லி (ஜான்ஸ் க்ரீக் நகர சபை)
- டாக்டர். ரிச் மெக்கார்மிக் (மத்திய பிரதிநிதி – ஜார்ஜியா)
சென்ற ஆண்டு இதே பெப்ரவரி மூன்றாம் நாள் அட்லாண்டா தமிழ் மன்றம் துவங்கியது. அதன் ஒரு வருட ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பிரமாண்டமான அணிச்சல் வந்திருந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிசு சீட்டு வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த பரிசுகளை வழங்கி உதவிய அனைவருக்கும் (ஜாய் ஆலுக்காஸ், லட்சுமி பிளோரிஸ்ட், & லட்சுமி திருநாவு) நன்றி.
ஆதவன் பாஸ் இசைக்குழுவின் சிறப்பு நிகழ்வு மாலையை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. “கொஞ்சம் நடிங்க பாஸ்” புகழ் ஆதவன் மற்றும் குழுவினர், நகைச்சுவை மற்றும் இசையை ஒரு கச்சிதமான கலவையாக கலந்து ஒரு இன்னிசை மழையை வழங்கினார்கள். குழந்தைகளும் பெரியவர்களும் பாடகர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
மேடை அலங்காரம் மற்றும் உறியடி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த திரு.ஜவஹர் அவர்களுக்கு மிக்க நன்றி. வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பாலானோர் உறியடி போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சி வழங்கிய அத்தனை குழந்தைகளுக்கும் அவர்களுக்கு பயிற்றுவித்த நடன இயக்குனர்களுக்கும் ஊக்குவித்த பெற்றோருக்கும் மிக்க நன்றி. நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் இந்நிகழ்ச்சியின் பெரும் வெற்றிக்கு அவர்களை உழைப்பை வழங்கினர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இடைநிலை மற்றும் மேனிலைப்பள்ளி மாணவர்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
Pongal celebration: Huge Thank you !
The event started with a grand feast -Banana Leaf Lunch.Guests enjoyed a traditional lunch and what else can be a fitting way to start off the festivities!
Governor of Georgia, Mr. Brian P. Kemp, has issued a commendation for “TAMIL THAI PONGAL DAY” (January 15th, 2024). We extend our gratitude to Governor Brian P. Kemp and Dr. Indran B. Indrakrishnan (MD, Georgia Board of Healthcare Workforce) for this esteemed recognition, and we look forward to further contributing to the cultural mosaic of our community.
- Our sincere gratitude to the chief guests who presided over the event and graced the occasion. ATM was very honoured to welcome the following guests to preside over our Pongal Thiruvizha.
Consul General of India, Atlanta Mr. Ramesh Babu Lakshmanan – Chief Guest - Forsyth County Commissioner, GA-Mr. Todd Levent – Special guest
- State Rep Mr.Carter Barrett – Special guest
- Johns Creek City council Mr.Bob Erramilli – Special guest
- US House Rep Dr. Rich McCormick – Special guest
Members were handed out prizes through lucky draw during the Raffle. Our thanks to Joy Alukkas, Lakshmi Florist and Lakshmi Thirunavu (Realtor) for sponsoring the gifts for the raffle.
The special event by Adhavan’s Boss Band made the evening a memorable one. “Konjam Nadinga Boss” fame Aadhavan and team, mixed comedy and music into a perfect blend and presented us a musical night with their foot tapping numbers. Kids and adults enjoyed and danced along with the team.
We thank Mr.Jawahar for the wonderful and vibrant decorations that filled the stage and the venue. A big thanks to him for setting up the Uri adi and bringing in nativity to our very own Atlanta. The “Uriyadi” competition was a huge success and was thoroughly enjoyed by the guests.