அட்லாண்டா தமிழ் மன்றம், இந்த சித்திரை திருவிழாவை இரு தினங்களாக கொண்டாட முடிவு செய்திருப்பதை பெரு மகிழ்வோடு அறிவிக்கிறோம். மன்றம் தொடங்கி, ஓர் ஆண்டாகி இருக்கும் இவ்வேளையில், அனைத்து வயதினரும் கண்டு களிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன், சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
இந்த இரு நாள் கொண்டாட்டங்களும், மன்ற உறுப்பினர்களுக்கு முற்றிலும் இலவசம். உற்றார், உறவினர், நண்பர்களுடன் இரு நாள் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
We are extremely pleased to announce that ATM has planned 2 day celebrations for our Chithirai Thiruvizha. These two-day celebrations are completely free for ATM members. We request you to participate in the two-day celebrations with your friends and relatives.
Click below to view the pattimandram event photos
பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அய்யா தலைமையில் சித்திரை திருவிழா பட்டிமன்ற அழைப்பிதழ் – April 12 2024. வாருங்கள் தமிழைக் கொண்டாடுவோம்!
Please use the below URL to buy Dinner boxes & snacks for the pattimandram event to be held on Friday evening, April 12 2024
தமிழ் அறிஞர், பேராசிரியர் பத்மஸ்ரீ திரு. சாலமன் பாப்பையா அய்யா அவர்களின் தலைமையில் பட்டி மன்றம் நடைபெறுகின்றது. இந்த பட்டிமன்றத்தில், திரு. சாலமன் பாப்பையா அய்யா அவர்களுடன் கலந்து கொள்ள, நம் மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இந்த பெருமை மிகு வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, உங்கள் விவாத திறமைகளை உலகுக்கு அறிவிக்க, இந்த இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்ய கடைசி நாள்: மார்ச் 31
ATM presents an exclusive opportunity for you to participate in the Pattimandram with Thiru. Solomon Pappiah. This is an exciting opportunity, bring your tamil debate skills. Please use this link to register. Last day to register is March 31st, 2024
கலை நிகழ்ச்சிகள்: அட்லாண்டாவின் பல்வேறு குழுக்கள் கலந்து கொண்டு, உங்கள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளிக்கவிருக்கிறது. இந்த கலை நிகழ்ச்சிகளில், உங்கள் குழுவினருடன் கலந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.
Registration for cultural events for all ages has begun. Bring your group to perform in front of our Tamil community, join the fun. Please use this link to register.
அட்லாண்டா தமிழ் மன்றம் ஒரு புதிய முயற்சியாக, சித்திரை திருவிழாவை, இரு தினங்களாகக் கொண்டாடுகிறது. அனைத்து வயதினரும், எங்களுது நிகழ்ச்சிகளை முழுவதுமாக கண்டு களிக்கவே இந்த முயற்சி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நீங்கள், இந்த புதிய முயற்சிக்கும் ஆதரவு அளிப்பீர்கள் என்றே நம்புகிறோம்.
We have carefully curated the events to ensure our Atlanta Tamil Mandram families are able to enjoy all the celebrations in a unique manner! Thank you for your support as always, please join us this time as well with family and friends.