Deepavali-Thankyou
தீபாவளி கொண்டாட்டம் - நன்றி நவிலல்
மன்றத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பெருமை படுத்தும் விதமாக, சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஜார்ஜியா மாநில செனட்டர் திரு. ஷான் ஸ்டில் (Mr. Shawn Still), ஜான்ஸ் க்ரீக் நகரத்தின் மேயர் திரு. ஜான் பிராட்பேர்ரி (Mr. John Bradberry) மற்றும் ஜான்ஸ் க்ரீக் திட்டக்குழு தலைவர் திரு. ஹிமான்ஷு கர்நவால் (Mr. Himanshu Karnwal) ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெற்ற டென்மார்க் உயர் நிலை பள்ளி மேடையும், வாளாகங்களும் வண்ணமயமாக அலங்கரிக்க பட்டிருந்தது. வளாகங்களில் விற்பனைக்காக 20-க்கும் அதிகமான சாவடிகள் (Stalls) அமைக்கப்பட்டிருந்தது.
தீபாவளி சிறப்பு பரிசாக, வைர மோதிரம் அறிவிக்கப்பட்டிருந்தது. மலானி ஜுவெல்லர்ஸ் (Malani Jewellers) நிறுவனம் இந்த சிறப்பு பரிசை வழங்கியது.
அத்துடன், லட்சுமி பிளோரிஸ்ட் (Lakshmi Florists) நிறுவனம் மேலும் மூன்று சிறப்பு பரிசுகளை வழங்கியிருந்தது. இசை நிகழ்ச்சியின் போது, திரு. கல்யாண் அவர்கள், பரிசு சீட்டுகளை தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
சுமார் நான்கு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு வந்திருந்த மக்கள் பிரமிப்பு அடைந்தனர்.
சைவம் மற்றும் அசைவம் உள்ளிட்ட அறுசுவை உணவுடன் தீபாவளி இனிப்பும் பரிமாறப்பட்டது. 500-க்கும் அதிகமான விருந்தினர்கள் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர்
இரவு உணவுக்கு பின்னர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்யாண்’ஸ் கோல்டன் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி துவங்கியது. பிரபல பின்னணி பாடர்கள் திரு. ராஜகணபதி மற்றும் திருமதி. ரோஷினி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பழைய மற்றும் புதிய பாடல்களையும், அனைவரையும் இருக்கையில் இருந்து எழுந்து ஆட வைக்கும் பாடல்களையும் பாடி அசத்தியது இந்த இசைக்குழு. விருந்தினர்களின் விருப்ப பாடல்களையும் பாடி மகிழ்வித்தனர்.
Deepavali Celebration - Sincere Thank you!
Event started with Tamil Thai Vazhthu and American national anthem performed graciously by ATM’s Choir and Band group.
The event commenced with cultural programs with over 27 teams comprising of our local talents performed and entertained the audience. ATM would like to thank all the participants and their organizers for entertaining us with colorful programs.
The other main attraction during the event was the live music show by Kalyan’s Golden Rhythms. The show was filled with songs of all genres. The singers and musicians kept the crowd well entertained with both their foot tapping and soothing songs. Singers Rajaganapathy, Roshini, Sujatha ,Rafi Mano and Sam along with local talents uplifted the energy of levels of the entire crowd throughout their performances.
ATM also created an opportunity for the audience to participate in a raffle. There were a total of 4 raffles and one of which was a “Diamond Ring” sponsored by Malani Jewellers. The other 3 were sponsored by Lakshmi Florists. The winner of the Diamond ring was picked by Mr.Kalyan of Golden Rhythms during the musical event. The winner was presented the ring on the stage along with the winners of the other 3 raffles. We thank Malani Jewellers and Lakshmi Florist for sponsoring the raffles.
During the event the local entrepreneurs set up stalls to market and sell their products. There were about 20 vendor booths and the response from the members to visit and buy the products was great. The area was transformed into a small colorful market buzzing with activity.
Any event is never complete without food! ATM organized Deepavali dinner with both veg and non veg options. Over 500 people enjoyed the dinner.