அறப்பணி நிகழ்வுகள்

அட்லாண்டா தமிழ் மன்றம் உணவுப் பொருள் தான நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. ஃபோர்சைத் கவுன்ட்டியில் பசியால் போராடும் மக்களுக்கு உதவ உணவுப் பொருட்கள் சேகரிக்கும் இந்த முயற்சியில் பலர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பதப்படுத்தப்பட்ட வடிசாறு புட்டிகள், சோளம் மற்றும் பிற தானிய அவல் பெட்டிகள், நிலக்கடலை வெண்ணெய், பழக்கூழ் புட்டிகள், பதப்படுத்தப்பட்ட கனி கிண்ணங்கள், பல்தானியக் கட்டிகள் மற்றும் அரிசி போன்ற பல்வேறு உணவுப் பொருட்கள் அட்லாண்டா தமிழ் மன்றத்தின் தொண்டுக் குழு மூலம் ‘மீல்ஸ் பை கிரேஸ்’ திட்டக் குழுவினரிடம் அன்புடன் ஒப்படைக்கப்பட்டன.

இந்த குழுவினர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆல்ஃபரெட்டா மிட்வே யூனிடெட் மெத்தடிஸ்ட் சர்ச்சில் ஒன்று கூடி, இந்த உணவுப் பொருட்களை தேவையுள்ள மக்களுக்கு பகிர்ந்து வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
நமது தொண்டுக் குழு ஒப்படைத்த உணவுப் பொருட்கள் முறையாக வகைப்படுத்தப்பட்டு, உதவிக்கு தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் விநியோகிக்கப்படுகின்றன.

அட்லாண்டா தமிழ் மன்றம் தனது சமூக சேவையை எதிர்காலத்திலும் தொடரும்போது, உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கிறது. உணவுப் பொருட்களை தானமாக வழங்கிய ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Charity Updates


Atlanta Tamil Mandram organized a food donation drive to support food pantries in Forsyth County that serve individuals and families facing hunger. The initiative received enthusiastic participation from many generous members of the community.

A variety of non-perishable food items were donated, including instant oatmeal packs, corn and other grain-based cereal boxes, peanut butter, fruit puree pouches, canned fruit cups, multi-grain bars, and rice. These items were thoughtfully collected and handed over by Atlanta Tamil Mandram’s volunteer team to the team behind the Meals by Grace initiative.

The Meals by Grace team gathers every Sunday at Midway United Methodist Church in Alpharetta, where they organize, pack, and distribute food to families in need.
All donated items are carefully sorted to ensure they reach the appropriate recipients efficiently and effectively.

Atlanta Tamil Mandram is committed to continuing its service to the community and looks forward to your continued support. We extend our heartfelt thanks to everyone who contributed food items to this meaningful cause.