ATM Summer Internship 2024
கோடைகால உள்ளகப்பயிற்சி
கோடைகால உள்ளகப்பயிற்சி (Summer Internship) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் பணி அனுபவமாகும் இந்த பயிற்சியில் வணிகத்துறை, மருத்துவத்துறை, லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பரந்த அளவிலான வேலைவாய்ப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் பொருத்தமான திறன்களையும் அனுபவத்தையும் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளால் அவை பொதுவாக மேற்கொள்ளப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்வார்கள்.
அட்லாண்டா தமிழ் மன்றம் இளைய தலைமுறையினருக்கு அவர்களுடைய விருப்பமான துறையில் பள்ளி கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர முனைந்தது. இளம் தலைமுறையினர் பலரும் மிக ஆர்வமாக இதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினர். பல நிறுவனங்கள் தாங்களாகவே எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தன.
அட்லாண்டா தமிழ் மன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால உள்ளகப்பயிற்சி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 16 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். கோடைகால உள்ளகப்பயிற்சி வெற்றிகரமாக ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்து முடிந்தது. உயர்நிலை பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளிலிருந்தும் சுமார் 30 மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களின் வயது, விருப்பமான துறைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம், 13 மாணாக்கர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். மருத்துவத்துறையை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப துறையிலும், தொழில் துறையிலும் மாணாக்கர்கள் ஆர்வமாக இருந்தனர்.
பெரும்பாலான மாணவர்கள் மருத்துவத்துறையை தேர்வு செய்து இருந்தனர். மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவத்துறையில் உள்ளக பயிற்சி வகுப்புகள் கிடைப்பது மிக கடினமாக இருப்பினும் நமது அட்லாண்டா தமிழ் மன்றத்திற்காகவும் நமது அடுத்த தலைமுறையின் நன்மைக்காகவும் இந்த கோடைகால உள்ளகப்பயிற்சிக்கு மிகவும் முயற்சி எடுத்து உறுதுணையாக இருந்த புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் இந்திரன் பி. இந்திரகிருஷ்ணன் (எம்.டி., ஜார்ஜியா போர்டு ஆஃப் ஹெல்த்கேர் ஒர்க்ஃபோர்ஸ்) அவர்களுக்கு சொல்லில் அடங்கா நன்றிகள்.
மருத்துவத்துறையை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப துறையிலும், தொழில் துறையிலும் மாணாக்கர்கள் ஆர்வமாக இருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி அளித்து உதவிய நெக்ஸ்ட்ஜென் கன்சல்டிங் நிறுவனத்தின் திருமதி. சுந்தரி குமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
சந்தைப்படுத்தல் துறையைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு GG டெக் குளோபல் நிறுவனத்தின் மூலமாக உள்ளகப்பயிற்சி வழங்கப்பட்டது. GG டெக் குளோபல் நிறுவனத்தின் திரு கங்காராஜ் அவர்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
அட்லாண்டா தமிழ் மன்றத்தின் இந்த புதிய முயற்சிக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தது மட்டுமில்லாமல்,இந்த பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, மாணாக்கர்களை பயிற்றுவித்தமைக்கு, மருத்துவர் திரு இந்திரன் இந்திர கிருஷ்ணன், திருமதி சுந்தரி குமார், திரு கங்காராஜ் அவர்களுக்கு அட்லாண்டா தமிழ் மன்றத்தின் நன்றிகள்
அட்லாண்டா தமிழ் மன்றம் இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற முயற்சிகளை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தி தரும் , என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Summer Internships
Summer Internships are short-term opportunities to gain entry-level work experience. Interns usually work alongside a specific team within a company, learning from seasoned professionals and trying out different aspects of the job. Rather than leading their projects, interns usually complete smaller tasks to support larger organizational initiatives. Internships are typically offered to high school and college students.
Given the number of families that are part of Atlanta Tamil Mandram and the talented youth in our community, ATM made an effort to get internship opportunities. Many organizations were willing to support this initiative and the youth were equally thrilled at the possible internship opportunities.
Atlanta Tamil Mandram’s 2024 summer internship program achieved great success, attracting 30 students from both High schools and Colleges to register. After filtering based on age, and areas of interest and conducting interviews, 13 students were selected. Healthcare had the highest number of participants, followed by the IT and marketing sectors. The Summer Internship started in April this year and concluded in August.
A vast majority of students expressed a preference for undertaking internships within the Healthcare field. It is often challenging to secure internships in the healthcare field. However, Dr. Indran Indrakrishnan, a nationally recognized Gastroenterologist and MD of Georgia Board of Healthcare Workforce, took proactive steps to provide valuable internship opportunities to students. He undertook this initiative as a gesture of support for ATM and as a means of extending his benevolence to the emerging young talent in the field. ATM expresses its sincere gratitude to Dr. Indran Indrakrishnan for his exceptional assistance.
Students also demonstrated an interest in emerging technology. The students selected in Information Technology were offered internships at Nextgen Consulting Inc. We extend our sincere thanks to Ms. Sundari Kumar of Nextgen Consulting Inc for providing this valuable internship opportunity and guiding our aspiring youth.
The students selected for internships in the marketing field were offered positions at GG Tech Global. We extend our gratitude to M. Gangaraj for providing this invaluable internship opportunity. The students gained significant insights into digital marketing trends, and these lessons will undoubtedly be beneficial as they pursue their careers.
ATM extends its sincere thanks and appreciation to Ms. Sundari Kumar of Nextgen Consulting Inc, and Mr. Gangaraj of GG Tech Global for their invaluable support. The guidance provided by each of them will have a lasting impact on the participants’ careers and prospects. ATM thanks them for graciously sparing time amidst busy schedules to offer assistance and mentorship to the participants.
ATM remains committed to offering more opportunities like this for our youth.