Charity

5k Walk & Run event 2024

5 மைல் ஓட்டம் / நடை

அட்லாண்டா தமிழ் மன்றத்தின் தொண்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த 5 மைல் ஓட்டம்/நடை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 
 
மன்றத்தின் முதல் முயற்சியான இந்த நிகழ்ச்சி, மதிப்பிற்குரிய போர்ஸைத் காவல் துறையினருக்கு நன்கொடை அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. 
 
இந்த 5 மைல் ஓட்டம்/நடை நிகழ்ச்சி மிக நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 80-க்கும் அதிகமானோர் பதிவு செய்து இருந்தனர். ஆறு வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் முதல் மதிப்புமிக்க மூத்த பெரியவர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர். 

ஜான்ஸ் கிரீக் நகர மன்றத்தின் உறுப்பினரான திரு. பாப் எர்ராமில்லி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டும் இல்லாமல், சமூக பணிகளுக்கு நம் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி ஒரு உரையையும் வழங்கினார். திரு. பாப் எர்ராமில்லி அவர்களுக்கு மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள். 

நிகழ்ச்சி துவங்கும் முன்பு, பங்கேற்ற அனைவருக்கும் யோகா பயிற்சியும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. திரு. முரளி அவர்கள் இந்த யோகா பயிற்சியை வழங்கி, 5 மைல் நடை/ஓட்டத்திற்கு தயார் செய்ய உதவினார். 

காலை சுமார் 8 மணியளவில், திரு பாப் எர்ராமில்லி அவர்கள் மிக உற்சாகமாக கொடியசைத்து, துவக்கி வைத்தார். 
 
நடை/ஓட்டம் முடிந்தவுடன், புத்துணர்ச்சிக்காக மாம்பழத்துடன் தயிர் கலந்த கனிச்சாறு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவியான செல்வி. பூர்வி அவர்கள் இதை விற்பனை செய்து, பொருள் ஈட்டி, “புட் பார் லைவ்ஸ்” என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தார். இந்த இளம் வயதில், இப்படி ஒரு தொண்டுள்ளம் கொண்ட திரு. பூர்வி அவர்களுக்கு மன்றத்தின் வாழ்த்துக்களும் வணக்கங்களும். 
மன்றத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தாங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்களுக்கு கிடைத்த பேராதரவையும், அன்பையும், நன்றியுடன் ஏற்று கொள்கிறோம். 
 
இந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்த மன்ற செயற்குழுவிற்கும், இளம் தன்னார்வ தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 
 
இந்த நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட நிதி போர்ஸைத் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் விபரங்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.

5k Run / Walk

We would like to express our deepest gratitude to our community for their support in making this fundraising event organized by ATMs Charity team a resounding success.
 
ATM proudly organized its inaugural 5K Run/Walk as a charitable endeavor to support our county’s esteemed first responders, the Forsyth Police Department.
 
The 5K Run/Walk garnered an overwhelming response from our community, with over 80 enthusiastic registrations. Participants spanned a wide range of ages, from young children as young as six to esteemed senior adults.

ATM is immensely grateful to Mr. Bob Erramilli, a distinguished member of the John’s Creek City Council, for gracing the event with his presence and delivering an insightful speech that highlighted the importance of the residents’ contributions to the community’s progress.

The event commenced with an Yoga Warm-up session, expertly led by Mr. Murali. His graciousness in agreeing to assist the participants in preparing for the walk was truly commendable.

At approximately 8 am, Mr. Bob enthusiastically flagged off both the Run and Walk, setting the participants off.
 
Following the race, participants had the delightful opportunity to purchase refreshing Mango Lassi from a stall thoughtfully set up by Ms. Poorvi. Ms. Poorvi, an admirable high school student, dedicates her time to selling Mango Lassi in the local area, with all proceeds generously donated to the Food 4 Lives organization.
In keeping with this spirit of giving, the proceeds from the Lassi sales at our event were also donated to the Forsyth County Police Department.
We thank everyone for your unwavering support in each and every event we conduct. Your enthusiasm keeps us going and do more!!!
 
We thank the student volunteers and ATM Team for helping to organize and execute this event successfully.
 
We will soon communicate the funds hand over process once we have all the details.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.