Community Center Land

அட்லாண்டா தமிழ் மன்ற சமூக மைய நிலம்

                   வணக்கம்! தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கும், அட்லாண்டா தமிழ் சமூகத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை அறிவிப்பதில் அட்லாண்டா தமிழ் மன்றம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.
 
அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளிலேயே சொந்த நிலம் வைத்திருக்கும் குறிப்பிட்ட மிகச்சில மன்றங்களில் அட்லாண்டா தமிழ் மன்றமும் இணைந்து இருக்கிறது.
அதுவும் அட்லாண்டா மாநகரில் சொந்த நிலம் வைத்திருக்கும் ஒரே தமிழ் அமைப்பு அட்லாண்டா தமிழ் மன்றம் மட்டுமே என்று அறிவிப்பதில் மிகப் பெருமிதம் அடைகிறோம்.

அட்லாண்டாவின் வடக்கே (ஃபோர்சித் கவுண்டி), பிரவுன் பிரிட்ஜ் சாலையில் 4.29 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான கையொப்பமிட்டு, முறைப்படி பதிவும் நேற்று (ஜனவரி 16 2025) செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, அட்லாண்டாவில் உள்ள தமிழ் சமூகத்திற்கு ஒரு நிரந்தர இடம், மற்றும் ஒரு பிரத்யேக சமூக மையத்தை வழங்குவதற்கான நமது நீண்டகால இலக்கை நோக்கி ஒரு பெரிய படியாகும்.
 
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தன்னலமற்று பங்களித்த அனைத்து உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர்கள் , இயக்குனர்கள் குழு, நிர்வாக குழு மற்றும் ஆதரவாளர்கள், உபயத்தார்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
அட்லாண்டா தமிழ் மன்றத்திற்கு ஆதரவளிக்கும் உங்கள் தாராள மனப்பாங்கு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை.
உங்களது இந்த ஆதரவு, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும், நமது இளைய சமுதாயத்தினருக்கும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து பரப்பவும் பாதுகாக்கவும் அட்லாண்டா தமிழ் மன்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
 
அட்லாண்டா தமிழ் மன்றத்தின் இந்த குறிக்கோளை அடைய எங்களுடன் இணைந்து அட்லாண்டா தமிழ் மன்றத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்கும் அனைத்து அட்லாண்டா தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி.

ATM Community Center Land

Atlanta Tamil Mandram is one of the very few Tamil organizations in USA with its own property and only Tamil Organization in Atlanta.
 
Atlanta Tamil Mandram is delighted to announce a significant accomplishment for the members of ATM and the Atlanta Tamil Community. With heartfelt gratitude, we share with you that the all closing formalities were completed successfully yesterday afternoon. 
With heartfelt gratitude, we share with you that the all closing formalities were completed successfully yesterday afternoon. 
 
ATM has acquired land property of 4.29 acres right on Brown Bridge Road, North Of Atlanta (Forsyth County).
This is a significant milestone toward our long-term goal of owning a place for our own Georgia Tamil community to call it a home and a dedicated community center.
 
We would like to express our sincere gratitude to all our ATM members, Honorary members, Lifetime members, Board of Directors, Executive Committee members, Teen and Adult volunteers and gracious sponsors for your selfless contributions towards this significant growth and accomplishment.
 
This joyous moment would not have been possible if not for all your generosity and support towards ATM.
At this important occasion, we celebrate you all who made it possible. 
 
Together, with all your support, we can continue to promote and preserve Tamil language and culture across all the Tamil-speaking population.
 
 
Thank you for believing in ATM, and for joining in the quest to achieve this big milestone and history of Atlanta Tamil Community.