அட்லாண்டா தமிழ் மன்ற நிலம் & பெயர் பலகை திறப்பு விழா

அட்லாண்டா தமிழ் மன்றம் (ATM), அட்லாண்டாவில் வாழும் தமிழர்களுக்காக பிப்ரவரி 2023 இல் மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் நிறுவப்பட்டது.
 
  • அட்லாண்டாவில் தமிழர்களுக்கான ஒரு சமூக மையத்தை நிறுவுதல்.
  • தமிழ் மொழிப் பள்ளிகள் மூலம் கல்வியை ஊக்குவித்தல்.
  • தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து கொண்டாடுதல்.
 
இதில் முதல் குறிக்கோளான தமிழ் சமூக மையத்தை நிறுவுவதற்கான மாபெரும் முதற்படியாக கடந்த ஜனவரி 16, 2025 வியாழக்கிழமை அன்று 4.3 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 29, 2025 சனிக்கிழமை, இந்த சாதனையை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அட்லாண்டா தமிழ் மன்ற பெயர் பலகை திறப்பு விழாவாக கொண்டாடப்பட்டது.
 
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அட்லாண்டாவுக்கான இந்திய துணை தூதர் திரு. ரமேஷ் பாபு மற்றும் ஜார்ஜியா பிராந்திய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் திரு.ஹிமான்ஷு கர்ன்வால் ஆகியோர் கௌரவித்தனர்.
 
அட்லாண்டா தமிழ் மன்ற பெயர் பலகை திறப்பு விழா நமது அட்லாண்டா தமிழ் சமூகத்திற்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயம் ஆகும். நமது மன்ற உறுப்பினர்கள் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், உபயத்தார்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை.
 
உங்கள் ஊக்கம், பங்களிப்புகள் மற்றும் இந்த தொலைநோக்கு பார்வையின் மீதான நம்பிக்கையே இதை சாத்தியமாக்கியது. இந்தக் கனவை நனவாக்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
 
அட்லாண்டா தமிழ் மன்றம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட குழுவாகும். பல ஆண்டுகளாக, இந்த மன்றம் கணிசமாக வளர்ந்து பல்வேறு கலாச்சார, இலக்கிய மற்றும் சமூக நிகழ்வுகளை தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இதில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள், பொங்கல் விழாக்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கியக் கூட்டங்கள், தமிழ் சமூக ஒற்றுமை என்ற வலுவான உணர்வை வளர்க்கின்றன.
 
அட்லாண்டா தமிழ் மன்றம் (ATM) அமெரிக்கா முழுவதும் இந்த முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. தமிழர்களை ஒன்றிணைத்து சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. கல்வி முயற்சிகள், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் பாரம்பரியம் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தப்படுவதை அட்லாண்டா தமிழ் மன்றம் உறுதி செய்கிறது.
 
சமீபத்தில் ஒரு பிரத்யேக சமூக மையத்திற்கான நிலம் வாங்கப்பட்டதன் மூலம், அட்லாண்டா தமிழ் சமூகம் கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான நிரந்தர இடத்தை உருவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துள்ளது. இந்த மையம் தமிழர்கள் இணைவதற்கும், தங்கள் அடையாளத்தைக் கொண்டாடுவதற்கும், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஜார்ஜியாவில் தமிழ் சமூகத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு மையமாக செயல்படும்.
 
இது ஒரு ஆரம்பம் மட்டுமே! உங்கள் ஆதரவுடன், நாங்கள் தொடர்ந்து வளரவும், சாதிக்கவும், நமது அடுத்த தலைமுறைக்கு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டு சேர்க்கவும் உறுதிபூண்டுள்ளோம்.
 
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி!!

Land Inauguration and Atlanta Tamil Mandram Name Board Opening Ceremony

Atlanta Tamil Mandram (ATM) was founded in February 2023 with a strong mission to:
 
  • Establish a Community Center for Tamils in Atlanta, Georgia
  •  Promote education through Tamil language Schools.
  •  Preserve and celebrate Tamil Arts and Culture.
 
The Atlanta Tamil Mandram purchased 4.3 acres of land towards our future Tamil Community Center on Thursday, January 16th, 2025. On Saturday, March 29th, 2025, we celebrated this accomplishment with a Land Inauguration and ATM signboard unveiling ceremony.
 
The event was honored by the Consulate General of India, Atlanta, Mr. Ramesh Babu, and Himanshu Karnwal, Director of the Georgia Regional Transportation Authority.
 
The ATM signboard unveiling and the ribbon-cutting ceremony began an exciting new chapter for our community. This achievement would not have been possible without the unwavering support of our wonderful members, Volunteers, Donors, Sponsors, and well-wishers. Your encouragement, contributions, and belief in this vision made it all possible. We sincerely thank everyone of you for turning this dream into reality.
 
The Atlanta Tamil Mandram is a thriving and close-knit group dedicated to preserving and promoting the Tamil language, culture, and traditions. Over the years, the community has grown significantly and actively organizes various cultural, literary, and social events. These include Tamil New Year celebrations, Pongal festivals, music and dance programs, and literary gatherings, fostering a strong sense of unity and belonging.
 
Atlanta Tamil Mandram (ATM) has been at the forefront of these efforts across the USA, serving as a platform to bring Tamils together and encourage community engagement. ATM ensures that Tamil heritage is passed down to future generations through educational initiatives, charitable activities, and cultural programs.
 
With the recent purchase of land for a dedicated community center, the Atlanta Tamil community has taken a significant step toward creating a permanent space for cultural and social activities. This center will serve as a hub for Tamils to connect, celebrate their identity, and support one another, further strengthening the community’s presence in Georgia.
 
The passion, unity, and commitment of the Tamil community in Atlanta continue to make it a vibrant part of the region’s cultural diversity, ensuring that Tamil traditions flourish for generations to come.
 
This is just the beginning! With your support, we will continue to grow, achieve, and create lasting impact. Thank you all for being part of this journey—we look forward to building a strong and vibrant Tamil community together!