Pongal 2025 Summary

Pongal event 2025: Summary

பொங்கல் திருவிழா நன்றி நவிலல்

அட்லாண்டா தமிழ் மன்றத்தின்பொங்கல் திருவிழா, ஜனவரி 25-ஆம் நாள் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மன்றத்தின் உறுப்பினர்களும், உறுப்பினர் அல்லாதவர்களுமாக 1700 அதிகமானோர் கலந்து கொண்ட பெருவிழாவாக அமைந்தது.

நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட 1700 பேர் இந்த விழாவை கண்டு களித்தனர். 450 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்ற 40விதமான கலை நிகழ்ச்சிகள், மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

“கலக்கப்போவது யாரு” புகழ் திரு.அசார் மற்றும் திரு.சுட்டி அரவிந்த் அரவிந்த் கலை குழுவினரின் இசையோடு இணைந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.இந்த சிறப்பு நிகழ்வு நகைச்சுவை மற்றும் இசையை ஒரு கச்சிதமான கலவையாக இருந்தது. குழந்தைகளுடன் பெரியோர்களும் இந்த நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.
 
இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட விற்பனைச் சாவடிகளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பொருட்களை வாங்கினர். செவிக்கு மட்டுமில்லாது வயிற்றுக்கும் வந்திருந்த விருந்தினர்களுக்கு அறுசுவை தலை வாழை விருந்து பரிமாறப்பட்டது.
 
உரியடி,கோலப்போட்டி,பொங்கல் போட்டி,பானை அலங்காரப் போட்டி போன்ற பல பிரிவுகளில் மன்ற உறுப்பினர்கள் கலந்து தங்கம் மற்றும் வெள்ளி காசுகளை பரிசாக வென்றனர்.
 
இந்நிகழ்ச்சியின் இன்னொரு பகுதியாக பான்யன் வே அட்லேண்டா தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய வெற்றிகரமான திருமண மாநாட்டில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வரன்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

🏆 பொங்கல் திருவிழா போட்டி வென்றவர்கள் அறிவிப்பு! 🎉

நம்முடைய பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்கதில் மகிழ்ச்சி அடைகிறோம்! பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🎊
 
🎨 கோலம் / ரங்கோலி போட்டி
🏅 வென்றவர்: ஷாந்தினி ஹரிதாஸ்
🥈 முதல் ரன்னர்அப்: திவ்யா ரமேஷ்
 
🎭 பானை அலங்காரம் போட்டி
🏅 வென்றவர்: நேத்ரா ஸ்ரீ
🥈 முதல் ரன்னர்அப்: ஐஸ்வர்யா விஜயகுமார்
 
🍚 சர்க்கரை பொங்கல் போட்டி
🏅 வென்றவர்: கார்த்திகா ராஜேஷ்
🥈 முதல் ரன்னர்அப்: லில்லி சந்திரமோகன்
 
🌾🎊பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் திறமை மற்றும் ஈடுபாடு விழாவை சிறப்பாக்கியது. எதிர்வரும் போட்டிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் தயாராக இருங்கள்!
 
நம்முடைய பொங்கல் திருவிழா கொண்டாட்தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்ட
  • திரு.ரமேஷ் பாபு (இந்திய துணைத் தூதரக அதிகாரி – அட்லாண்டா)
  • திரு.பிராண்டன் பீச் (மாநில பிரதிநிதி)
அவர்களுக்கு நன்றி.
 
இந்த பிரம்மாண்ட நிகழ்விற்காக மாநில பிரதிநிதி திரு .பிராண்டன் பீச் அவர்களை அழைத்து வர உதவிய டாக்டர் இந்திரன் இந்திரகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களது சிறப்பு நன்றி.
 
வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிசு சீட்டு வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.இந்த பரிசுகளை வழங்கி உதவிய அனைவருக்கும் (ஜோய் ஆலுக்காஸ் மற்றும் மலபார் ஜுவல்லர்ஸ்) நன்றி.
 
மேடை அலங்காரம் மற்றும் உறியடி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த திரு.ஜவஹர் அவர்களுக்கு மிக்க நன்றி. வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பாலானோர் உறியடி போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
 
இந்த இனிமையான தருணங்களை தனது புகைப்படம் மற்றும் காணொளி மூலம் பதிவு செய்த திரு.வெங்கட் குட்டா,மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
 
இந்த விழாவிற்கான ஒளி மற்றும் ஒளி அமைப்பை எப்பொழுதும் போல மிகச் சிறப்பாக செய்து கொடுத்த திரு.பிரகாஷ்/அட்லான்டா மோஜோ குழுவிற்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றி.

அமெரிக்க ஜனாதிபதி விருது !

அட்லாண்டா தமிழ் மன்றத்தின் மூலமாக தமிழ் சமூகத்திற்கு சிறந்த சேவைகள் புரிந்து வரும் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சமூக சேவைகளுக்கான அமெரிக்க ஜனாதிபதி விருது பெற்ற அனைத்து அட்லான்டா தமிழ் மன்ற தன்னார்வலர்களுக்கும் எங்களது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

PONGAL 2025 Event Thanks

We are thrilled to share the incredible success of ATM Pongal Thiruvizha, held on Saturday, January 25, 2025!
This vibrant celebration of Tamil Thirunal Thai Pongal brought together 1700+ members for a day filled with joy, culture, and community spirit. Here are some of the highlights:
 
  • 450+ participants showcasing their talents across 40+ cultural programs
  • 100+ volunteers who worked tirelessly behind the scenes
  • 25+ booth vendors and colorful decorations that set the festive tone
  • UriyadiKolam competition, Pongal competition, and Pot Decoration competition, our members participated and won exciting gold and silver lucky draw prizes, and so much more
  • Special performances led by KPY Azhar and the Chutty Arvind team
  • Delicious food offerings, including a hearty lunch and food trucks
  • The successful Indian Matrimony Convention organized by Banyan Way

🏆 Pongal Festival Contest Winners Announcement! 🎉

We are delighted to announce the winners of the competitions held as part of our Pongal festival celebrations! Heartfelt congratulations to all participants! 🎊
 
🎨 Kolam / Rangoli Competition
🏅 Winner: Shanthini Haridoss
🥈 1st Runner-up: Divya Ramesh
 
🎭 Pot Painting Competition
🏅 Winner: Nethraa Sree
🥈 1st Runner-up: Aiswhwariya Vijayakumar
 
🍚 Sarkkarai Pongal Competition
🏅 Winner: Karthika Rajesh
🥈 1st Runner-up: Lilly Chandramohan
 
🌾🎊 A big thank you to all participants! Your talent and enthusiasm made the event even more special. Stay tuned for more exciting contests and celebrations!

We extend our heartfelt gratitude to all ATM members, participants, choreographers/coordinators, parents, youth and adult volunteers, our three wonderful emcees, and faculty staff who contributed to making this event a grand success!

A special note of thanks to our esteemed chief guests:
Mr. Rameshbabu Lakshmanan, the Honorable Consul General of India
Senator Brandon Beach, with special appreciation to Dr. Indran Indira Krishnan for facilitating his presence
Additionally, we thank our event partners, including Mr. Prakash/Atlanta Mojo Team for sound/audio, Mr. Jawahar for décor, and Mr. Venkat Kuttua for photo and videography, for their exceptional contributions.

ATM is overjoyed to have connected with more than 1700 community members, and your unwavering support inspires us to create even greater events in the future.
Stay tuned for upcoming events – we can’t wait to celebrate with you again!

Warm regards,
ATM Team

Presidential award !

“We sincerely congratulate and thank all the volunteers who received the Presidential award during the event for their outstanding service and dedication.”